கோவை ரயில் நிலையத்தில் உள்ள 5 -வது பிளாட்பாரத்தில் இருந்து கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அங்கு சென்ற ஒருவர் திடீரென்று ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து ரயில் முன் படுத்துக் கொண்டார். இதை ரயில் இன்ஜினியர் டிரைவர் கவனிக்கவில்லை. இதனால் ரயில் புறப்பட்டபோது ரயிலில் தலை நசுங்கி அவர் ...
கோவை சிங்காநல்லூரில் உள்ள நாராயணசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் கோவிந்ராஜ். இவரது மகன் ஜெபராஜ் (வயது 35) இவர் கடந்த 23ஆம் தேதி (ஞாயிறு) வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்திற்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம், அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 55) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துவிட்டு ...
கோவை மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு மேலாளர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று கணபதி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பழக்கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவனை வேலைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த சிறுவன் மீட்கப்பட்டான். இது தொடர்பாக வியாபாரி பூபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே ...
கோவை பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனி. 2-வது வீதியை சேர்ந்தவர் ராஜசேகர் ( வயது 38) இவர் தெலுங்கு வீதியில் நகைபட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கார்த்திக் என்ற ராஜ ருகிதாஸ் (வயது 34) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் நகை பட்டறை அருகே அறை ...
கோவை ஆர். எஸ். புரம். சி.எம்.சி. காலணியை சேர்ந்தவர் ரகு குமார். இவரது மகள் ஹேமப்பிரியா (வயது 22) இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் . யாரோ இவருடைய புகைப்படத்தை வைத்து போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அதில் இவரது போட்டோவை நண்பர்களுக்கும் குடும்பம் நண்பர்களுக்கும் அனுப்பியதாக ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பண்டிகை காலங்களும் கோடை சீசன் துவங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகள் கர்நாடகா கேரளா ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கூடலூர் நகரத்தின் இரண்டு பக்கமும் உள்ள வாகனங்களை ஒரு மாத காலத்திற்கு யாருக்கும் பார்க்கிங் கொடுக்காத அளவு மாவட்ட நிர்வாகமும், ...
சென்னை: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் சிறைவாசிகளுக்கான விளையாட்டு பயிற்சிகள் தொடக்க விழா மற்றும் காவலர்களுக்கான மின் மிதி வண்டிகள் வழங்கும் விழா நேற்று மத்திய சிறை-1 புழலில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுக்கள் வழி ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மனைவி லலிதா ( வயது 54 ) இவரது 3-வது மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. இதற்காக கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் 23-ஆம் தேதி பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது . அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு மணப்பெண்ணுக்கு சேலை நகைகள் ...
கோவை மாநகராட்சி ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து நிலையான நகர்ப்புற வளர்ச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் திடக்கழிவு மேலாண்மை குறித்து நகர்ப்புற ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் கூறும்போது:- கோவை மாநகராட்சி மற்றும் ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து நகர்ப்புற ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் ...













