கோவையில் கவனக் குறைவாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்காமல் இருசக்கர வாகனத்தை திருப்பிய நபரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்களும் மோதி காயமடைந்தனர். கோவை ஆவாராம்பாளைம் பகுதியில், ஒரு நபர் சாலை ஓரம் நிறுத்தி வைத்து இருந்த அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு திருப்ப முற்பட்டு உள்ளார். அப்போது அவர் ...
புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக இன்று 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.. கடந்த வருடம் டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் சில மர்ம நபர்கள் மனிதக்கழிவுகளை கலந்துவிட்டனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த இந்த அதிர்ச்சியான ...
கேரளாவில் பிரதமர் மோடி விசிட்… “சினேக யாத்ரா” முதல் வந்தே பாரத் வரை… இனி பாஜகவிற்கு ஏறுமுகம் தான்..!
இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலம் கொச்சியில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ரோட்ஷோ நடத்தினார். ஐஎன்எஸ் கருடா கடற்படை விமான நிலையத்தில் இருந்து இளைஞர்கள் மாநாடு நடைபெறும் இடம் வரையிலான 2 கிமீ பாதையின் இருபுறமும் இருந்த மக்களை நோக்கி கேரள பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி கை அசைத்தார். பிரதமர் ...
சென்னை: மே 12ல் நடைபெறுவதாக இருந்த தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 12 மணி நேர வேலையை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் நேற்று அறிவித்ததை அடுத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த அருண்குமார் என்பவர் AK TRADERS யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் காயின் நிறுவனத்தைக் கடந்த இரண்டு வருடங்களாக ஓசூர் ராமகிருஷ்ணா நகரில் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 7,70,000 ரூபாய் டெபாசிட் செய்தால் வாரம் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் எனப் பொதுமக்களின் ஆசையைத் தூண்டும் விதமாகக் கவர்ச்சிகரமான விளம்பரங்களை அப்பகுதியில் ...
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்துள்ளார். மதுரையின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா நேற்று முன் தினம் (ஏப்.04) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக உலக ...
ஆண்டுதோறும் அனைத்து கல்லூாிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், ஆண்டுதோறும் அனைத்து கல்லூாிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படும் என ...
தமிழகத்தின் மையமாக திருச்சி அமைந்துள்ளதால் அரசியல் கட்சிகள் திருச்சியில் மாநாடு நடத்தவே பெரும்பாலும் விரும்புகின்றனர். திருச்சி என்று திருப்பு முனை என்று தான் அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள். திருச்சியில் பெரும்பாலும் ஜி கார்னர் மைதானத்தில் மாநாடுகள் நடைபெறும் நிலையில் அண்ணா முதல் ஜெயலலிதா வரை அங்கு மாநாடுகள் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் ஓ ...
கூட்டுறவு வங்கிகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வங்கி சேவைகளை வழங்குகிறார்கள்.. கடுமையான கட்டுப்பாடுகள், மோசமான பொருளாதார நிலைமைகள் மற்றும் உள்ளூர் அரசியல் காரணமாக, இந்த கூட்டுறவு வங்கிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.. மிகப்பெரிய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியும் கூட்டுறவு வங்கிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. 2023 நிதியாண்டில் சுமார் 8 கூட்டுறவு வங்கிகளின் உரிமத்தை ...
கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எட்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வருமான வரித்துறை சோதனையில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை பீளமேடு ...












