மக்களே உஷார்… EB BILL மோசடி.. எச்சரிக்கும் டிஜிபி சைலேந்திர பாபு..!

சென்னை: இபி பில் கட்டுபவர்களை குறி வைத்து மோசடி நடக்கிறது.. உங்கள் மின் இணைப்பு இன்று ராத்திரி 10 மணிக்கு கட் ஆகும் என்று சொல்லி மோசடி நடக்கிறது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: “இபி பில் ஸ்கேம், இது எப்படீன்னா, உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். இன்னைக்கு நைட்டு 10 மணிக்கு மின்சாரத்தை துண்டிக்கபோறோம்னு வரும். ஏன்னா, மின்சார பில்லை அப்டேட் பண்ணலன்னு வரும். இதுக்குமேலே உங்களுக்கு ஏதாவது தெரியனும் அப்படீன்னா, மின்சார அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு நம்பரை கொடுத்துடுவாங்க..

நீங்க பதறிப்போயிடுவீங்க.. 10மணிக்கு கரண்ட் போச்சுன்னா, ஏசி ஒர்க் பண்ணாது, இப்ப சம்மரு.. சிக்கலாகிடுமே என்று சொல்லி, நீங்கள் அந்த நம்பரில் கூப்பிட்டு பேசுவீங்க.. ஏன் மின்சாரம் ரத்தாகப்போகுது என்று நீங்கள் கேட்பீங்க.. அவங்களோ, நீங்க மின்சார கட்டணம் செலுத்தல அதுனால் மின்சாரத்தை துண்டிக்கப்போகிறோம் என்று சொல்வார்.

அப்போது நீங்க.. இல்லைங்க போன மாசம் வரைக்கும் மின் கட்டணத்தை கட்டியிருக்கேனே என்று சொல்வீங்க… ஆனால் அவரே கட்டியிருக்கீங்க.. ஆனால் அது எல்லாம் அப்டேட் ஆகல.. நீங்க உங்க ஆதார் கார்டை இணைக்கல.. அதனால் அப்டேட் ஆகல.. அப்பத்தான் உங்களுக்கு ஸ்டிரைக் ஆகும். அரசு ஆதார் கார்டை மின்வாரியத்தை இணைக்கக்கூறியதே என்பது தெரியவரும்,.

team viewer support அப்படீன்ற ஆப்பை டவுன்லோடு பண்ணுங்க என்று சொல்வாங்க. டீம் வியூவர் என்பது ஸ்கிரீன் ஷேரிங் ஆப் ஆகும். நம்ம ஸ்கிரீன்ல என்னென்ன செய்யுறமோ, அது எல்லாம் எதிர்ல பேசுவறவங்களுக்கு தெரியும். அதை டவுன்லோடு செய்த பிறகு,என்ன செய்யனும்னனு கேட்பீங்க.. அவனும், நீங்க இபி வெப்லைசட்டுக்கு போங்க.. சும்மா 10 ரூபாய் கட்டுங்க அப்படீன்னு சொல்வான்.. நீங்களும் நம்பி 10 ரூபாய் கட்டும் போது, உங்கள் வங்கி நம்பரு, உங்க ஐடி நம்பரு, பாஸ்வேர்டு, ஓடிபி வரைக்கும் எல்லாமே அவன் பார்த்திருடுவான். இதை பார்த்திட்டு உங்கள் வங்கியில் இருக்கக்கூடிய மொத்த பணத்தையும் எடுத்துட்டு போவான். இன்னும் சொல்லப்போனால் சாவகாசமாக கூட அந்த பணத்தை திருடிட்டு போக வாய்ப்பு உள்ளது. இப்படி ஏமாந்த மக்கள் நிறைய இருக்காங்க..

ஒரு வேளை நீங்க ஏமாந்துட்டீங்க அப்படீன்னா , உடனே நீங்கள் 1930 என்ற எண்ணிற்கு உடனே அழைத்து, இந்த மாதிரி என்னை ஏமாற்றிட்டாங்க.. என்னுடைய பணம் பறிபோய்விட்டது அப்படீன்னு நீங்க சொல்லீட்டீங்கங்கன்னா.. உடனடியாக உங்களது பணம், இன்னொரு வங்கிக்கு மாறி போகாத வகையில பிரீஸ் பண்ணி , அந்த பணம் உங்களுக்கு திருப்பி வரக்கூடிய வகையில நம்முடைய காவல்துறை உங்களுக்கு உதவி செய்யும்.

இந்த சைபர் குற்றவாளிகளை பார்த்தீங்க அப்படீன்னா, எப்பவுமே புதுசு புதுசா அப்டேட் ஆகிட்டே இருப்பாங்க.. இபி கணக்கை ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்று சொன்ன உடன் நீங்கள் நம்பிவிடுவீங்க.. அந்த வகையில் ஒட்டுமொத்த பணத்தையும் வங்கியில் இருந்து திருடிடுவாங்க.. இபி பில், 10 மணிக்கு கரண்ட் கட் பண்ண போறோம் அப்படீன்லாம் சொன்னா நம்பாதீங்க. அதை புறந்தள்ளிவிடுங்கள். சைபர் குற்றங்களை பொறுத்தவரை விழிப்போடு இருப்போம்.. பாதுகாப்பாக இருப்போம்..” இவ்வாறு டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.