கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் சுத்தப்படுத்தக் கூடாது என்று நகராட்சித்துறை உத்தரவு.. எந்த ஒரு நிறுவனமோ தனி நபரோ கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை இறக்க கூடாது என்றும் மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சித்துறை உத்தரவிட்டுள்ளது. கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் மூலம் சுத்தப்படுத்தினால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ரூ.5 ...

கோவை கணபதி போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். அவரது மகன் பிரகாஷ் ( வயது 19) கோவைபுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த 6 மாதங்களாக கல்லூரிக்கு செல்லவில்லை.மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் .முன்னதாக அவர் தன் கையை ...

கோவை ஆர். எஸ். புரம் சுக்கிரவார் பேட்டையில் உள்ள 2 வீடுகளில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர் எஸ் புரம் போலீசுக்கு தகவல் வந்தது .உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் நாகராஜ் ...

கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட்,பேஸ் – 2 பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 47 ) டிரைவாக வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று சிட்கோ எல்.ஐ.சி. காலனியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்து சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டை சேர்ந்த சாமி என்ற சிவகுமார் ...

கோவை கணபதி சி .எம். எஸ். ஸ்கூல் பின்புறம் உள்ள ஆர். .டி. நகரை சேர்ந்தவர் முருகானந்தம் . இவரது மகள் ஹரிதா (வயது 27) கணபதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கரூரைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வருகிற 26 ஆம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ...

கோவையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் கல்வி உதவித்தொகை ( ஸ்காலர்ஷிப்) வாங்கி தருவதாக கூறி அவர்களுடைய முகவரியை கண்டறிந்து,ஸ்காலர்ஷிப் வழங்கும் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கை தெரிந்து பணம் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதில் ஏமாற்றபட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தனர் ...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் அருகே பாஜக தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது.இங்கு கடந்த 13-ந்தேதி மாலையில் ஒரு ஆசாமி திடீரென்று உள்ளே புகுந்தார். அவர் அலுவலகத்தின் கதவை உள் பக்கமாக தாழ்போட முயன்றார்.இதைப் பார்த்த அலுவலக ஊழியர் விஜயன் அவரை தடுத்து கேட்டுக்கு வெளியே தள்ளினார். பின்னர் அந்த ...

கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன .இங்கு உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. என்று அழைக்கப்படும் சரக்கு சேவை வரி செலுத்த வேண்டும் .இந்த வரியை செலுத்தாமல் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பல தனியார் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி .செலுத்தாமல் போலிபில் தயாரித்து வழங்குவதாக கோவை உக்கடத்தில் உள்ள ...

கோவை போலீசார் வழக்கு விசாரணை ,ரோந்து, போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். இது போன்ற நேரங்களில் சிலர் போலீசார் தங்களை தாக்கியதாகவோ அல்லது லஞ்சம் கேட்பதாக புகார் அளிக்கின்றனர். இதனால் போலீசார் தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எனவே போலீசாருக்கு சீருடையில்அணியும் கேமரா ( பாடி கேமரா) வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை மாவட்டபோலீஸ்சூப்பிரண்டு ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளபோளுவாம் பட்டி காப்புக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காட்டு யானை தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மின்வேலி ...