கோவை கிறிஸ்தவ மத போதகர் உட்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளபோளுவாம் பட்டி காப்புக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காட்டு யானை தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மின்வேலி அமைத்து காட்டு யானை உயிரிழப்புக்கு காரணமாக இருந்த இடத்தின் உரிமையாளர் ரத்தினபுரியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரான டி. கே. ஜான், சாடி வயலை சேர்ந்த ஜான் செல்வராஜ், கிறிஸ்துதாஸ், ராஜேந்திரன் ஆகியோர் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஜூடிசியல் 5-வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது அதில் கிறிஸ்தவ மத போதகர் டி.கே. ஜான்,ஜான் செல்வராஜ், கிறிஸ்துதாஸ், ராஜேந்திரன் ஆகியவருக்கு தல 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வி.. எல். சந்தோஷ் தீர்ப்பு வழங்கினார்.