கோவை பள்ளி மாணவ,மாணவிகளிடம் ஸ்காலர்ஷிப் வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி:5 பேர் கைது-டெல்லியில் பயிற்சி பெற்றதாக மோசடி கும்பல் தலைவன் வாக்குமூலம் .!!

கோவையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் கல்வி உதவித்தொகை ( ஸ்காலர்ஷிப்) வாங்கி தருவதாக கூறி அவர்களுடைய முகவரியை கண்டறிந்து,ஸ்காலர்ஷிப் வழங்கும் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கை தெரிந்து பணம் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதில் ஏமாற்றபட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தனர் .இதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிரமாக துப்பு துலக்கி நாமக்கல்லை சேர்ந்த 5 பேரை இன்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ7 லட்சம் பணம் ,44 செல்போன் 25 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடி கும்பலின் தலைவன் டெல்லியில் தங்கி இருந்து மோசடி பற்றி பயிற்சி பெற்றதாக விசாரணையில் தெரிய வந்தது..