ராணுவ வீரர் மரணம்: முதல்வர் வாயை திறக்கவே இல்லை.. மொத்தம் 24,200 கேளுங்க- அண்ணாமலை ட்விட்..!

ரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.திமுக, அதிமுக என எல்லா கட்சிகளை சேந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து இடையன்காட்டு வலசு பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை பேசியதாவது, திமுக அளித்த 517 வாக்குறுதிகளில் 49 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை, சமையல் எரிவாயு மானியம் ரூ.100 என, 22 மாதங்களுக்கு மொத்தம்ரூ.24,200 வழங்குமாறு பிரச்சாரத்துக்கு வரும் அமைச்சர்களிடம், வாக்காளர்கள் கேட்க வேண்டும். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால்தான், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறும்.

இந்த தொகுதியில் வாக்காளர்களை பட்டியில் அடைத்துவைத்து, தமிழக அரசியலை 1950-60 காலகட்டத்துக்கு திமுக எடுத்துச் சென்றுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இந்த அநியாயம் நடைபெறவில்லை. திருமங்கலம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல்களால், இந்திய அளவில் தமிழகத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.

தற்போது ஈரோடு கிழக்கில் திமுக செய்யும் தீங்கான செயல்களால், இப்பகுதி மக்களுக்குத்தான் கெட்ட பெயர் உண்டாகும். இங்கு முகாமிட்டுள்ள 30 அமைச்சர்களும் வரும் 27-ம் தேதி வரைவாக்காளர்களுக்கு ராஜ மரியாதை அளிப்பார்கள். அதன் பின்னர் அவர்கள் இங்கு இருக்க மாட்டார்கள். ஆனால், அதிமுக சார்பில் இருமுறை வெற்றி பெற்றுள்ள வேட்பாளர் தென்னரசு, இதே பகுதியில் சுற்றி வருவார் என்று பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மாநில முதல்வர், தனது கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் போலிக் கதைகளுக்கு விழுந்து கிடப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த மெத்தனப் போக்கை நம் மாநில மக்கள் பொறுத்துக் கொள்வதும் வருந்தத்தக்கது.

19.02.2023 அன்று, ஜேஎன்யூவில் உள்ள மாணவர் செயல்பாடு மையத்தில், சத்ரபதி சிவாஜி மகாராஜை மாலை 6:30 மணிக்கு கௌரவிக்கும் நிகழ்ச்சியை ஏபிவிபி திட்டமிட்டது. இருப்பினும், எஸ்எப்ஐ இன் நிகழ்வு திட்டமிடப்பட்ட முன்பதிவை விட இழுத்தடிக்கப்பட்டதால் ஏபிவிபியி ன் நிகழ்வு இரவு 7:30 மணிக்கு மட்டுமே தொடங்கியது.

ஏபிவிபியின் மாணவர்கள் இரவு 8:30 மணிக்கு ஓய்வு எடுத்து, இரவு உணவிற்கு வெளியே சென்றிருந்தபோது, எஸ்எப்ஐயைச் சேர்ந்த மாணவர்கள் செயல்பாட்டு மையத்திற்குள் நுழைந்து, ஜேஎன்யு அதிகாரிகளின் முன் அனுமதியுடன் வைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி மகாராஜ் & மகா ராணா பிரதாப் ஆகியோரின் உருவப்படங்களைச் சேதப்படுத்தினர்.

ஏபிவிபி மாணவர்கள் எஸ்எப்ஐ மாணவர்களின் நடத்தைக்காக அவர்களை எதிர்கொண்டபோது, அந்த நடவடிக்கை மையத்தில் கார்ல் மார்க்ஸ் & லெனின் உருவப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. எஸ்எப்ஐ பின்னர் பெண்கள் ஏபிவிபி மாணவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களுக்கு பதிலடி கொடுத்தது. இது இரு தரப்பிலிருந்தும் அடித்துக் கொண்டனர். இந்த சம்பவத்தில் இரு தரப்பு மாணவர்களும் காயமடைந்தனர்.

தற்செயலாக, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் கொடூரமாக கொல்லப்பட்டது குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்து வருகிறார். ஒரு பொறுப்புள்ள முதலமைச்சராக இருதரப்பு மாணவர்களுக்கும் அறிவுரை கூற வேண்டும். சித்தாந்த வேறுபாடுகள் உள்ள சூழலில் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நெருப்பை எரிய விடக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.