சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் பறிபோன விவகாரம்: கட்சி அலுவலகத்திற்கு உத்தவ் தாக்கரே வருகை.!

க்நாத் ஷிண்டே பிரிவினர் மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர்.

அதே வேளையில், உத்தவ் தாக்கரே தனது ஆதரவாளர்களுடன் சிவசேனா தலைமை கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

25 ஆண்டுகால பாஜக கூட்டணியை கடந்த 2019ஆம் ஆண்டு சிவசேனா கட்சி முறித்தது. அதன் பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்வரானார். அதன் பிறகு அந்த கூட்டணி பிடிக்காமல், சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தனியாக பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மையை நிரூபித்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.

சிவசேனா கட்சி இரண்டாக பிரித்து இரு பிரிவுகளாக இருந்ததால் அக்கட்சி சின்னம் முடக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அண்மையில் தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கட்சியும், கட்சி சின்னமும் ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்து உத்தவ் தாக்கரே தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கிடையில், கட்சி சின்னமும் , கட்சியும் கிடைத்ததால், அதனை அடுத்து, ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர். அதே வேளையில், உத்தவ் தாக்கரே தனது ஆதரவாளர்களுடன் சிவசேனா தலைமை கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார். இதனால் தற்போது மஹாராஷ்டிரா அரசியலில் மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மேற்கண்ட நிகழ்வுகள் தமிழக அரசியலில் அதிமுக கட்சிக்கும் நிகழ்ந்து வருவதும் குறிப்பிட தக்கது. ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தக்கரே போல இபிஎஸ் – ஓபிஎஸ் என பிரிந்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியது குறிப்பிடதக்கது.