திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கஞ்சா வழக்கில் சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
விசாரணை கைதியான இவருக்கு இன்று அதிகாலை திடீரென கோவை மத்திய சிறையில் வைத்து மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய சிறையில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் கைதி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில் சங்கர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சங்கரை பரிசோதனை செய்த கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சங்கரின் பிரேதத்தை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர்.
மேலும் சங்கரின் உயிரிழப்பு தொடர்பாக பந்தை சாலை போலீசார் விசாரணை.
Leave a Reply