பழங்குடியின மக்களின் கைவினைப் பொருட்களை ரசித்து பார்வையிட்டு, குறைகளை கேட்டு அறிந்த வனத்துறை அமைச்சர் – பொதுமக்கள் பாராட்டு

பழங்குடியின மக்களின் கைவினைப் பொருட்களை ரசித்து பார்வையிட்டு, குறைகளை கேட்டு அறிந்த வனத்துறை அமைச்சர் – பொதுமக்கள் பாராட்டு…

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற மேல் தொகுதியான வால்பாறை பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்க் கொண்டார். முன்னதாக அட்டகட்டி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை தொடர்ந்து வனத் துறையினர் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு ஆனைமலை புலிகள் காப்பக அட்டகட்டி பயிற்சி மையத்தில் பழங்குடியின மக்கள் தயாரித்து வைக்கப்பட்டு இருந்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டு கீழ்பூனாச்சி பழங்குடியின மலைக் கிராமத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு நிதியுதவி, தையல் இயந்திரம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார் அப்போது அமைச்சரிடம் கைவினை பொருட்கள் தயாரிக்க அதற்கு தேவையான உண்ணிச் செடிகளை எடுத்துச் செல்ல வாகன வசதியும், சிறிய குடிலை பெரிய குடிலாக மாற்றவும், குடிநீர் குழாய் அமைத்து தரவும் கோரிக்கை விடுத்த மலைக் கிராம மக்களின் கோரிக்கையை கனிவுடன் கேட்டு அறிந்த அமைச்சர் தமிழக முதல்வரின் உத்தரவுக்கு இணங்க கோரிக்கைகளை நிறை வேற்றிதருவதாக உறுதி அளித்து. உடனடியாக சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளிடம் அதற்கான நடவடிக்கை மேற்க் கொள்ளவும் அறிவுறுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத பழங்குடியின மக்கள் அமைச்சரின் துரித நடவடிக்கையை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளை ஆய்வு மேற்க்கொண்டார் இந்நிகழ்வின் போது வனத்துறை அதிகாரிகள், வால்பாறை நகர நிர்வாகிகள் மற்றும் பழங்குடியின கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.