இந்தியா முழுவதும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்த ஆம்வே நிறுவன சொத்துக்கள் முடக்கம்..!

கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்த ஆம்வே நிறுவனத்தில் 757 கோடி ரூபாய் முடக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்நிறுவனம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது

ஆம்வே நிறுவனத்தின் முடக்கப்பட்ட சொத்துக்களில் திண்டுக்கல்லில் உள்ள அசையும் சொத்து அசையா சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் ஆகிய பொருட்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

ஆம்வே நிறுவனத்தின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் அந்நிறுவனத்தின் ஏஜண்டுக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது