இலங்கையில் புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்பு-முழு விவரம் இதோ..!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கோத்தயபய சகோதரர்கள் வகுத்த பொருளாதார கொள்கைகளே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கூறி, அவர்களை பதவியில் இருந்து விலகக் கோரி எதிர்க்கட்சியினர், பொது மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உயர்வு, பசி,பட்டினி, விலைவாசி உயர்வு, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்து வரும் இலங்கை மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இதனால் கடந்த 4ம் தேதி இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்த 26 அமைச்சர்களில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே, மகன் நமல் ராஜபக்சேவும் அடங்குவர். இந்த செய்தியை கல்வி அமைச்சராக இருந்த தினேஷ் குணவர்த்தன, செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில் 17 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவையை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று அமைத்துள்ளார். இந்த அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா, வனத்துறை அமைச்சராக விமலவீர திசநாயகவும், சன்னா ஜெயசுமனா சுகாதாரத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.