1 லட்சம் மின் இணைப்பு-விவசாயிகளிடம் கலந்துரையாடுகிறார் முதல்வர் ஸ்டாலின்.!!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில்,கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின்படி, 2022 மார்ச் மாதத்திற்குள் விவசாயிகளுக்கான ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில்,ஒரு லட்சம் மின் இணைப்பு திட்டத்தில் கடைசியாக 100 பேருக்கு மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் இன்று ஒரு லட்சம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் உரையாட உள்ளார்.

அதன்படி, சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முதல்வர் விவசாயிகளிடம் கலந்துரையாடுகிறார்.