சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுகவில் சீட் பெற்றுத்தர கேபி.முனியசாமி ஒரு கோடி ரூபாய் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு சுமத்தியது மட்டுமல்லாமல் பேசியதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
பணத்தை பெற்றுக் கொள்ள மகனை அனுப்புவதாக கேபி முனியசாமி கூறியதாக ஆடியோவில் கூறுகிறார். இப்படி பேசிய முனுசாமி கட்சிக்கு தியாகி மாதிரி, உத்தமன் மாதிரியும் பேசிக் கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்து ஆடியோவை வெளியிட்டார்.
கேபி. முனுசாமி பற்றி தொண்டர்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் ஆடியோ வெளியிடுகின்றேன். என்னுடைய ஆடியோவிற்கு பதில் சொல்லவில்லை என்றால் கேபி முனிசாமி குறித்த வீடியோவையும் வெளியிடுவேன். எனது ஆடியோவுக்கு பதில் கூறவிட்டால் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவையும் வெளியிடுவேன் என அதிர வைத்துள்ளார்.
Leave a Reply