மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுனரும், பயணித்தவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆட்டோவில் கிடைத்த வயர், பேட்டரி போன்ற பொருட்களை இருந்ததை தொடர்ந்து இது தீவிரவாத சதி சம்பவமாக இருக்கலாம் என்கிற கோணத்தில் கர்நாடக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஆட்டோவில் பயணித்தவர் செல்போன் சிக்னலைகளை கவனித்து, அவர் தமிழகத்தில் நாகர்கோவிலில் வசிக்கும் நபருடன் பேசியது தெரியவந்து, தற்போது தமிழக போலீசார் துணையுடன் கர்நாடக போலீசார் நாகர்கோவிலில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜீம் ரகுமான் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே உதகையை சேர்ந்த சுரேந்தர் என்பரிடம் நேற்று காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply