தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்கும் மதுபானங்கள் மீது பார் கோர்டு அறிமுகம்- வெளியான தகவல்.!!

மிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததன் மூலம் கடந்த 10 மாதங்களில் ரூ.5.49 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. பீர் உள்ளிட்ட மது பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ. 20 வரை கூடுதலாக டாஸ்மாக் ஊழியர்கள் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பீர் உள்ளிட்ட மது பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், இனி டாஸ்மாக் நிறுவனம் தயாரிக்கும் மதுபானங்கள் மீது விரைவில் பார் கோர்டு அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தவும், வசூலாகும் பணத்தை பாதுகாப்பாக வைக்க லாக்கர்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.