வால்பாறையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டு மாடு- மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர்..!

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. இவைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து எந்த வித அச்சமும் இன்றி நடமாடி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள வில்லோனி டாப் டிவிசன் பகுதியில் நுழைந்த காட்டுமாடு ஒன்று அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் தத்தளித்து வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காட்டுமாட்டை தண்ணீர் தேங்கியிலிருந்து மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.