காவல் துறை சார்பாக கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறை சார்பாக மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆலோசனைக் இணங்க வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் காவலர்களும் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில சிறப்பு காவலர்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக வால்பாறை அஞ்சலகம் முன்பிருந்து தொடங்கிய அணிவகுப்பு நகர்பகுதி வழியாகச்சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது