8-ம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் ஆபாச பேச்சு -டீ மாஸ்டர் போக்ஸோவில் கைது..!

கோவை : புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், வடசேரி பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மகேஸ்வரன் ( வயது 21 )இவர் கோவை அருகே உள்ள கோவில் பாளையத்தில் ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவியிடம் ஒரு தலை காதல் வைத்திருந்தார். 8-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவியிடம் செல்போன் எண்ணை வாங்கி வைத்து போனில் ஆபாசமாக பேசி வந்தாராம்.இது குறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் கூறினார். அவரது தாயார் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி டீ மாஸ்டர் மகேஸ்வரனை நேற்று கைது செய்தார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.