கோவையில் தினமும் பறவைகள், பிராணிகளுக்கு உணவு வழங்கும் சமூக சேவகர்..!!

கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் கணபதி லே-அவுட்டில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் செல்வகுமார் (வயது 58) பி.ஏ. பட்டதாரி சமூக சேவகர்..இவர் சுய தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பெயர் சாந்தி ( வயது 51)இவருக்கு நித்யா ( வயது 32 )என்ற ஒரே மகள் உள்ளார்.இவர் மருத்துவ படிப்பு முடித்துவிட்டு ஐதராபாத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.இவரது கணவர் பெயர் வருண் . அவரும் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இவர்களுக்கு விகான் (வயது 3)என்ற மகன் உள்ளான்.செல்வகுமார் துணைவியார் பெயர் சாந்தி (வயது 51) அவர்கள் கடந்த 8 மாதங்களுக்கு  முன்பு உடல் நலக்குறைவால் திடீரென்று இயற்கை எய்தி விட்டார் .செல்ல குமார் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.கடந்த 8 ஆண்டுகளாக பறவைகள் – பிராணிகளுக்கு உணவு கொடுக்கும் பழக்கத்தை கையாண்டு வருகிறார்.இவர் தினமும் காலையில் அந்த பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட பறவைகள்,பூனைகள், தெருநாய்கள் ஆகியவற்றிற்கு உணவளித்து வருகிறார்,

இதற்காக அவர் தினமும் காலையில் 5 மணி அளவில் எழுந்து சிக்கன் வாங்கி வந்து அந்த செல்ல பிராணிகளுக்கு உணவு தயாரித்து தெருத்தெருவாக சென்று வழங்கி வருகிறார்.அவர் அந்த உணவுகளை தரையில் வைப்பதில்லை அதற்காக 25 தட்டுகள் வாங்கி வைத்துள்ளார்.அந்தத் தட்டில் தான் இந்த உணவை பரிமாறுகிறார்.இவர் அந்தப் பகுதியில் சென்றாலே போதும் அந்த செல்ல பிராணிகள் அவரை சுற்றி வட்டமடிப்பது,காக்கா தோளில் உட்காருவது. எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் தினமும் அந்தப் பகுதியில் செல்ல பிராணிகளுக்கு உணவு வைப்பதை பலர் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.

இதுகுறித்து சமூக சேவகர் செல்வகுமார் கூறியதாவது: இந்த உணவு வழங்கும் பழக்கத்தை கடந்த 10 ஆண்டுகளாக நான் செய்து வருகிறேன்.இதற்கு என் மனைவி சாந்தி மிகவும் உறுதுணையாக இருந்து வந்தார்.நானும் என் மனைவியும் தான் அதிகாலையில் எழுந்து அந்த செல்லப்பிராணிகளுக்கு உணவு தயாரிப்போம்.தற்போது என் மனைவியும் இறந்துவிட்டார்.இருந்தாலும் நான் என் மனைவியின் நினைவாக அந்த செல்ல பிராணிகளுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறேன். இன்று வரை உணவு வழங்குவதில் எந்த குறையும் வைக்கவில்லை.என் மனைவி இயற்கை எய்தினாலும் இறைவனின் வடிவில் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் என்று நினைக்கிறேன். அதிகாலை நான் எழுந்து சிக்கன் வாங்கி நானே சமைப்பேன்.பிறகு அவைகளை பாத்திரத்தில் எடுத்துச் சென்று காக்கா, குருவி, பூனைகள் நாய்கள் போன்ற பிராணிகளுக்கு கொடுப்பேன்.அதற்குப் பிறகுதான் நான் வீட்டில் வந்து சாப்பிடுவேன்.சிக்கன் உணவை செல்ல பிராணிகள் சாப்பிட்டு மகிழ்வதை பார்த்து நான் ஆனந்தம் அடைகிறேன்.அவைகள் சாப்பிடும் போது அதில் என் மனைவியின் உருவத்தைப் பார்க்கிறேன்.இன்னும் இதை விரிவு படுத்தலாம் என்று நினைக்கிறேன் பக்கத்து தெருகளிலும் பல தெருநாய்களும் செல்ல பிராணிகளும் உணவு இல்லாமல் வாடுவதை கேள்விப்பட்டேன். அவைகளுக்கும் நான் விரைவில் உணவு அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.