கோவையில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை- வடமாநில வாலிபர் கைது..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் வட மாநில வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரபீன்ந்தா பரிடா ( வயது 37) என்பவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர் தான் தங்கி இருக்கும் குடியிருப்பு அருகே கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 3 அடி உயரம் கொண்ட கஞ்சா செடிகளை அகற்றினர்.இவைகள் தீ வைத்து அழிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கஞ்சா செடி வளர்த்த ரபின்ந்தா பரிடாவை போலீசார் கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.