கோவையில் 2 குழந்தைகளுடன் இளம்தாய் எங்கோ மாயம்..!!

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள, திப்பே கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் ( வயது 36) நகை தொழிலாளி.அவரது மனைவி மலர்விழி ( வயது 26) இவர்களுக்கு சுஷ்மிதா (வயது 9 )குமரன் (வயது 8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மணிவண்ணன் வேலைக்கு சென்று விட்டார் .இந்த நிலையில் மலர்விழி தனது மகள் சுஷ்மிதா மகன் குமரன் ஆகியோருடன் யாரிடமும் சொல்லாமல் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது கணவர் மணிவண்ணன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.