ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை வீடியோ எடுத்த பக்கத்து வீட்டு பையன்: இளம்பெண் சத்தம் போட்டதால் வாலிபர் தப்பி ஓட்டம் -போலீஸ் வலை வீச்சு..!!

கோவை வெள்ளலூர் பக்கம் உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் இவரது மகள் கவுசல்யா( வயது 21) ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அங்குள்ள பட்டேல் ரோட்டில் 8 வீடுகள் கொண்ட லைன் வீட்டில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் பொது குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு குளியலறைக்கு கவுசல்யா நேற்று குளிக்கச் சென்றார் .அப்போது பக்கத்து குளியலறைக்குள் புகுந்த அந்த குடியிருப்பில் வசிக்கும் விக்னேஷ் குமார் ( வயது 27 ) என்பவர் செல்போனில் கவசல்யா குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்து கவுசல்யா சத்தம் போட்டார் .இதனால் விக்னேஷ் குமார் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் விக்னேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். இவர் ஒரு தனியார் கார் நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார் . இவர் மீது மானபங்க முயற்சி உட்பட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.