உ.பி.யில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… பகைத்தால் “பலி”.. ஆக்சன் படங்களை மிஞ்சும் கொடூர ரவுடி அடிக் அகமது என்கவுண்டர்..!

க்னோ: உத்தர பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட அடிக் அகமதுவிற்கு பின் அதிர்ச்சி அளிக்கும் வரலாறு இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மகன் அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த என்கவுண்டர் போலீஸ் என்கவுண்டர் என்று கூறப்பட்டு வரும் நிலையில்தான் உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது கொலை செய்யப்பட்டு உள்ளார். உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது மீது 100க்கும் மேற்பட்ட கிரிமினல் கேஸ்கள் உள்ளன. அவர் எம்பியாக இருந்தவர் என்றாலும் அரசியல் தாதா என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக் அகமது ஏற்கனவே கடத்தல் கேஸ், பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கு, உமேஷ் பால் கொலை வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஆவார். இவர் பெரிய குற்றவாளி என்றாலும்.. சட்ட ரீதியாக அவருக்கு தண்டனை கொடுப்பதே சரியானது.

உமேஷ் பால் கொலை வழக்கு காரணமாக சிறையில் இருந்த அவரை மருத்துவ பரிசோதனை என்று கொண்டு சென்றனர். அப்போது வழியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அங்கே செய்தியாளர்கள் போல கெட்டப் போட்டு வந்தவர்கள் போலீசாருக்கு முன்னிலையில், கேமராவிற்கு முன்னே இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தி உள்ளனர். முதலில் அடிக் அகமதுவை சுட்டுவிட்டு அதன்பின் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.

அரசியல்: அடிக் அகமது தீவிர அரசியல்வாதியாக இருந்து.. அதன்பின் கொடூர ரவுடியாகவும் டானாகவும் மாறினார். ஒருமுறை எம்பி, 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர் 1989ல் இருந்து அரசியலில் இருக்கிறார். உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் மேற்கு தொகுதியில் இருந்து இவர் எம்எல்ஏவாக தேர்வானார்.1989, 1991, 1993 ஆகிய வருடங்களில் சுயேட்சையாகவும், 1996ல் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவாகவும், 2002 அப்னா தளம் எம்எல்ஏவாகவும் இங்கே வென்றார்.

2004ல் மீண்டும் சமாஜ்வாதி கட்சிக்கு திரும்பிய அடிக் அகமது இந்த முறை லோக் சபா தேர்தலில் புல்பூர் தொகுதியில் இருந்து வென்றார். இங்கே ஒரு காலத்தில் நேரு எம்பியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எம்பி தேர்தலில் வென்றதால் அடிக் அகமது தனது அலகாபாத் மேற்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரின் தம்பி அஷ்ரப் இங்கே போட்டியிட்டார். ஆனால் அவர் தலித் வேட்பாளர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ராஜு பாலிடம் தோல்வி அடைந்தார்.

இதனால் ராஜு பால் மீது கோபம் அடைந்த அடிக் அகமது, 2005 ஜனவரி மாதம் ராஜு பால் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பும் போது, அவரின் காரை மறித்து அவரை சரமாரியாக தாக்கி சுட்டுக்கொலை செய்தார்.

இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்த வழக்கில் ஒரே சாட்சியான ராஜு பாலின் உறவினர் உமேஷ் பால் கோர்ட்டில் இவருக்கு எதிராக சாட்சி சொன்னதால் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அடிக் அகமது அவரையும் கொலை செய்தார். சாலை நடுவே வைத்து அவரின் கார் மீது பாம் போட்டு, அதில் சரமாரியாக 500 தோட்டாக்கள் துளைக்க துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

இதில்தான் ஏற்கனவே ராஜு பால் கொலை வழக்கில் சிறையில் இருந்து பெயிலில் வந்த அடிக் அகமதுதான் உமேஷ் பாலை கொலை செய்தார். 2006லேயே உமேஷ் பாலை கடத்தி பல மாதங்கள் வைத்து இருந்து அவரை பிறழ் சாட்சியாக மாற அடிக் அகமது தொல்லை செய்தார்.

ஆனால் உமேஷ் பால் பிறழ் சாட்சியாக மாறாத நிலையில் அவரை கொலை செய்துள்ளார் அடிக் அகமது. இவர் மீது 00க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கொலை, கொள்ளை, பலாத்காரம் என அவரின் குடும்பத்தினர் எல்லோரின் மீதும் வழக்குகள் உள்ளன.

அதேபோல் கட்டப்பஞ்சாயத்து மூலம் மட்டுமே இவருக்கு பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன. தன்மகனின் காரை ஓவர்டேக் செய்தான் என ஒருவரை அடிக் அகமது கொலை செய்த சம்பவங்கள் கூட நடந்துள்ளன .

அடிக் அகமது அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார். உமேஷ் பால் மரணத்தில் தேடப்பட்டு வந்த அவர் போலீசால் கொலை செய்யப்பட்டார்.

2012ல் இவரின் ஜாமீன் மனுவை விசாரித்த போது, அந்த வழக்கில் இருந்தே 10 நீதிபதிகள் பின்வாங்கி கடைசியில் 11வது நீதிபதி அடிக் அகமதுவிற்கு பெயில் கொடுத்தார். அந்த அளவிற்கு இவர் மீதான அச்சம் உத்தர பிரதேசம் முழுக்க பரவிக்கிடந்தது.

அவர்தான் தற்போது மீடியா வெளிச்சத்தில்.. போலீஸ் கண் முன்னே சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.