மூதாட்டியிடம் நைசாக பேசி 4 தங்க வளையல்கள் அபகரிப்பு- 2 மர்ம ஆசாமிகளுக்கு வலை..!

கோவை ஆர். எஸ். புரம் தியாகராய புது வீதி இதைச் சேர்ந்தவர் மனைவி ரஞ்சன் எச் ஷா ( வயது66) இவர் நேற்று பூமார்க்கெட், ரங்கேகவுடர் வீதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 ஆசாமிகள் இவரிடம் தாங்கள் ஆதித்யானந்த் கோவிலில் இருந்து வருவதாக கூறினார்கள். பின்னர் இவரிடம் நைசாக பேசி, கவனத்தை திசை திருப்பி , அவரிடமிருந்த 35 கிராம் எடை கொண்ட 4 தங்க வளையல்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ரஞ்சன். எச்.ஷா ஆர் .எஸ் .புரம். போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.