அரசு பேருந்தை பிடித்து ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவரால் கோவையில் பரபரப்பு….

அரசு பேருந்தை பிடித்து ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவரால் கோவையில் பரபரப்பு….

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே உள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வெளிநாட்டவர் ஒருவர் கோவை அவிநாசி சாலையில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்து காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்துள்ளார்.

சித்ரா பகுதியில் இருந்து ஹோப்ஸ் காலேஜ் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் அவிநாசி சாலையில் வெளிநாட்டவர் ஸ்டாட்டிங் செய்த காட்சிகள் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாகனங்கள் அதிகமாக செல்லும் பரபரப்பான அவிநாசி சாலையில் ஓடும் பேருந்தில் பின்புறமாக வெளிநாட்டவர் ஸ்கேட்டிங் செய்தார். ஆபத்தை உணராமல் வெளிநாட்டவர் செய்த இந்த நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.