கோவையில்  இரண்டு ஆடுகள் தாக்கியது  கருஞ்சிறுத்தையா ?… வனத்துறை விசாரணை

கோவையில்  இரண்டு ஆடுகள் தாக்கியது  கருஞ்சிறுத்தையா ?…

கோவை தடாகம் அருகே காளையனூர் வாட்டர் கம்பெனி பகுதியில் இரவில் புகுந்த சிறுத்தை விஜயன் மற்றும் சுந்தரராஜ் என்பவர்களின் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டுக் குட்டியை தாக்கியதில் 2 ஆடுகள் பலியாகின. அங்கிருந்தவர்கள் துரத்தி அடித்ததால் ஆடுகளை விட்டு விட்டு சென்று விட்டது. மனிதர்களைத் தாக்கும் முன் சிறுத்தைகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கணுவாய் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது விவசாயத் தோட்டங்களில் புகுந்து அங்கிருக்கும் ஆடு மற்றும் நாய்கள் அடித்து கொன்று எடுத்துச் செல்கின்றன,

இந்த நிலையில் கோவை தடாகம் அருகே காளையனூர் வாட்டர் கம்பெனி பகுதியில் நேற்று இரவு புகுந்த சிறுத்தை விஜயன் மற்றும் சுந்தரராஜ் என்பவர்களின் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டுக் குட்டியை தாக்கிக் கொன்றுள்ளது. சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் சிறுத்தையை துரத்தி அடித்ததால் ஆடுகளை விட்டு விட்டுச் சென்று விட்டது.

இதையடுத்து அங்கு வந்த கோவை வனத்துறையினர் அங்கு பதிந்திருந்த சிறுத்தையின் காலடித் தடங்களை பதிவு எடுத்துச் சென்றதுடன். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை பொருத்திச் சென்றுள்ளனர். மனிதர்களைத் தாக்கும் முன் சிறுத்தைகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்