கோவை கணபதி, அண்ணா நகர் முதல் விதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி பானுமதி ( வயது 43) கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு மகள் லாவண்யா ஸ்ரீ (வயது 19 )தாயார் பானுமதியுடன் வசித்து வருகிறார்.இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி (பேஷன் டெக்னாலஜி) 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று கல்லூரிக்கு சென்ற லாவண்யா ஸ்ரீ வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார்.ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ 5 ஆயிரம் எடுத்துள்ளார்.முன்னதாக வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார் அதில் “என்னை தேட வேண்டாம்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து இவரது தாயார் பானுமதி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
Leave a Reply