கோவை பேரூர் பக்கம் உள்ள ராம செட்டிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் .இவரது மனைவி அன்னம்மாள்(வயது 55) நேற்று இவர் தனியார்டவுன் பஸ்சில் வைசியாள் வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை ஒரு பெண்நைசாக திருடினார். அவரை கையும் களவுமாக பிடித்து கடைவீதி போலீசில் ஒப் படைத்தார் .போலீசார் அவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்த ராமு மனைவி நாகம்மாள் (வயது 52) என்பது தெரிய வந்தது.நகை மீட்கப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply