கோவையில் சமூகவலைதளங்களில் பிரியாணி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட 9 பேர் மீது வழக்கு.!!

கோவை : மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகிறதா? என்று கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அப்போது கோவையில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு பிரியாணி விற்பனை செய்வதாகவும், அதை போலீஸ் கண்டறிந்து உள்ளதாகவும் அவதூறு பரப்பும் வகையில் டுவிட்டரில் பதிவுகள் வெளியாகி இருந்தது..உடனே அவதூறு பதிவுகளை வெளியிட்ட 9 டுவிட்டர் கணக்காளர்களின் மீது சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் புகார் அளித்தார் .அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் டுவிட்டர் கணக்கில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட 9 பேர் மீது 4 சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தார் .இதையடுத்து அந்த 9 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். பிரியாணி குறித்து அவதூறு பரப்பியது கோவையில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.