உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை கொலை செய்த 60 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை.!!

சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் 2 வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் சின்னப்பனின் மகன் வரப்பிரசாதம் வயது 60 கட்டிட வேலை செய்யும் கொத்தனார். இவரது மனைவி பெயர் விசுவாசம் வயது 50 கட்டிட வேலைகளுக்கு உதவியாளராக சித்தாள் வேலை பார்த்து வந்துள்ளார் .இவர்களுடன் மகன் ஆபிரகாம் அந்தோணி மகள் ஆனந்தி மருமகன் இருதயராஜ் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் விசுவாசம் கால தாமதமாக வீட்டிற்கு வருவாராம் . இதைப் பார்த்த கணவன் வரப்பிரசாதம் மனைவி விசுவாசத்தை தட்டி கேட்பாராம். சம்பவம் நடந்த அன்று விசுவாசம் கால தாமதமாக வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த வரப்பிரசாதம் விசுவாசத்தை பார்த்து எவனோடு படுத்து விட்டு வருகிறாய் என சண்டை போட்டுள்ளார். மேலும் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த மகன் ஆபிரகாம் அந்தோணி தடுக்க வந்ததாகவும் அவனையும் அடித்துள்ளார். மகள் ஆனந்தி தட்டி கேட்டுள்ளார் . வரப்பிரசாதமோ மகளிடம் நீ என்ன விளக்கு பிடிக்கிறாயா நீ போய் உன் வேலையை பார் என துரத்தியுள்ளார். பின்பு வரப்பிரசாதம் படுக்க சென்று விட்டார். மனைவி விசுவாசம் தூங்கிக் கொண்டிருக்கும்போது உல்லாசமாக இருக்கலாம் என வரப்பிரசாதம் அழைக்க விசுவாசம் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வரப்பிரசாதம் எவன் எவனோடு படுத்துவிட்டு உல்லாசம் அனுபவிக்கிறாய் ஆனால் புருஷன் கூப்பிட்டால் சுகத்திற்கு வர மறுக்கிறாய் . இந்த ஆத்திரத்தில் அலமாரியில் வைத்திருந்த வெட்டுக் கத்தியை எடுத்து தலையில் வலது பக்கமும் காது பக்கத்திலேயேயும் வலது கண் மேலேயும் வெட்டியுள்ளார். இதனால் விசுவாசம் கத்த ஆரம்பிக்கவே அருகில் இருந்து தலைகாணியை எடுத்து முகத்தின் மேலே அமுக்க ஆரம்பித்தார் . இதனால் விசுவாசத்தின் உயிர் பிரிந்து உள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளியை வரபிரசாத்தை கைது செய்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை தீர விசாரித்த நீதிபதி எழிலரசி குற்றவாளி வரப்பிரசாத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் 6 மாத காலம் மெய் காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ் சசிரேகா திறமையாக வாதாடி பாராட்டுதலை பெற்றுள்ளார். தீர்ப்பு தினத்தன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தவர்கள் நீதிபதி எழிலரசியை பாராட்டி அம்மா உங்களோடு கைகளை குலுக்கிக் கொள்ளலாமா வாட்ஸ் அப்பில் போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என இள மங்கைகளும் வயது முதிர்ந்தவர்கள் பொக்கை வாய்பாட்டிகளும் ஆனந்தக் கூச்சலிட்டனர். அம்மா உங்கள் வம்சம் நன்றாக இருக்க வேண்டும் என கத்த ஆரம்பித்தனர்..