சாய் தளம் கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி ஆதிதிராவிடர் மக்கள் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு..!

பட்டுக்கோட்டை தாலுகா சூரப்பள்ளம் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் சாய் தளம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தனர்.

இந்த மனுவில் கூறியதாவது

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆதிதிராவிடர் தெரு சூரப்பள்ளம் பகுதியில் ,ஊராட்சி அலுவலகம் உள்ளது. அந்த ஊராட்சி அலுவலகத்தில் சாய் தளம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த சாய் தளம் கட்டும் இடமானது ஆதிதிராவிடர் மக்கள் செல்லும் பாதையாகும்.

அந்தப் பகுதியில் சுமார் 60 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு உயிர்நிலை பள்ளி செல்லும் சாலையை ஒட்டி ஆதிதிராவிடர் தெரு உள்ளது.

இந்த இடம் அழகு பத்து சென்ட் அளவு ஆகும். இந்த பகுதியில் சுமார் 12 அடி அகலத்தில் தான் ஆதிதிராவிடர்கள் பாதியாக பயன்படுத்தி வருகின்றனர்.

இறப்பு, காதலி ,திருமண விழா ,தேர் திருவிழா அவசர மருத்துவ பயன்பாட்டுக்கான பாதையாக பயன்படுத்தி வருகிறோம்.

இப்போது ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானத்தின் போது கட்டிடம் கட்டிய பகுதி போக இங்கு இருந்த எங்கள் பாதையை அடைத்து தாய்தளம் கட்டி வருகிறார்கள்.

தனிநபர் பாதையை அடைத்தால் நாங்கள் சென்று வருவதற்கு கடினமாக உள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை பேரூராட்சி தலைவர் மற்றும் பெருந்தலைவரிடம் மனு அளித்துள்ளோம்.

மேலும் பட்டுக்கோட்டை வட்டாட்சியிடம் மனு அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு சாய்தளம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.