காதல் தோல்வியால் 19 வயது இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை..!

பொள்ளாச்சி பக்கம் உள்ள சூளேஸ்வரன் பட்டி, கண்ணகி வீதியை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மகன் ராம்குமார் ( வயது 19)இவர் மேற்கூரை அமைக்கும் தொழில் செய்து வந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் வைத்து இருந்தார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண் ராம்குமாரிடம் பேசுவதை தவிர்த்து விட்டார்.இதனால் மனம் உடைந்த ராம்குமார் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டத்தில் வேட்டியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணேசன் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.