மின்னல் வேகத்தில் தாறுமாறாக கார் ஓட்டிச் சென்ற 13 வயது சிறுவன்… துரத்தி பிடித்த போலீசார்.!!

கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை 4 – 30 ம மணி அளவில் சுங்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரை எடுத்துக்கொண்டு ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு அதி வேகத்தில் ஒட்டி சென்றார். அங்குள்ள காஸ்மோ பாலிடன் கிளப் அருகே பள்ளி குழந்தைகள் ஏற்றுச் சென்ற ஒரு ஆட்டோ மீது மோத முயன்றான். ஆட்டோ டிரைவர் உடனே ஆட்டோவை நடைபாதை மீது ஏற்றினார்.. இதனால் அதிர்ஷ்டமாக ஆட்டோவில் இருந்த பள்ளிக் குழந்தைகள் உயிர் தப்பினர். பின்னர் அந்த கார் நிர்மலா பள்ளி அருகில் உள்ள ஒரு கார் மீது மோதியது. இதில் காரில் சென்றவர் மேலும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட சிலர் மீதும் கார் மோதியது. காரை சிறுவன் தாறுமாறாக ஒட்டி வருவதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்த காரை நிறுத்த முயன்ற போது நிற்கவில்லை. இது குறித்து போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து காரை துரத்தி பிடித்தனர்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சரோஜா விசாரணை நடத்தி வருகிறார் . அவர் கூறியதாவது:- சிறுவனிடம் காரை கொடுத்த பெற்றோர்கள் மீது தான் வழக்கு பதிவு செய்யப்படும். சிறுவர்களிடம் வாகனங்கள் கொடுப்பது சிறுவனுக்கும் ஆபத்து, சிறுவனால் மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்து. இந்த விஷயத்தில் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.இந்த சம்பவத்தில் பெற்றோர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்..