கோவை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.24 லட்சம் மோசடி – 4 பேர் மீது வழக்கு ..!

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் அப்துல் நாசர் ( வயது 48) ரியல் எஸ்டேட் அதிபர்.இவரிடம் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த”சாகுல் அமீது ஷான்சா செரிப் உட்பட 4 பேர் தொழில் ரீதியாக அறிமுகம் ஆனார்கள் .இந்த நிலையில் செல்வபுரத்தில் 5.5 சென்ட் நிலம் இருக்கிறது. அது எனக்கு தெரிந்த நபர்தான் வைத்திருக்கிறார். அந்த நிலத்தை நான் வாங்கித் தருகிறேன் என்று சாகுல் அமீது அப்துல் நாசரிடம் கூறியுள்ளார். அத்துடன் அதற்கான பணத்தையும் கேட்டுள்ளார். இதை யடுத்து கடந்த 20 20 ஆம் ஆண்டு பல்வேறு தவணைகளாக அப்துல் நாசர்,சாகுல் அமீதுவின் வங்கிக் கணக்கில் ரூ 24 லட்சம் செலுத்தினார். ஆனால் அவர் சொன்னபடி அந்த நிலத்தை வாங்கி கொடுக்கவில்லை. இது தொடர்பாக அப்துல் நாசர் பலமுறை சாகுல் அமீதுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த வித பதிலும் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அப்துல் நாசர் சாகுல் அமீது வின் வீட்டுக்கு நேரில் சென்று தனக்கு நிலம் வேண்டாம். நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அங்கிருந்த சாகுல் அமீது,|ஷான்சா, செரீப் உட்பட 4 பேர் பணத்தை திருப்பி கொடுக்க முடியாது. பணத்தைக் கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி யுள்ளனர். இது குறித்து அப்துல் நாசர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சாகுல்அ மீது, ஷான் சா செரீப் உட்பட 4 பேர் மீது கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.