குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பாரம்பரிய பழக்காட்சி

நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் சிம்ஸ் பூங்​கா​வில் 66-வது பழக்​​காட்சி தொடங்​கியது. ஒரு டன் பேரீச்​சம்​பழங்​களை கொண்டு வடிவ​மைக்​கப்​பட்ட பிரம்​மாண்ட டைனோசர்​கள், குழந்தைகளை​யும் சுற்​றுலா பயணி​களை​யும் வெகு​வாக கவர்ந்துள்​ளன.

கோடை விழா​வின் ஒரு பகு​தி​யாக, குன்​னூர் சிம்ஸ் பூங்​கா​வில் 66-வது பழக்​காட்சி நேற்று தொடங்​கியது. இந்த ஆண்டு பழக்​காட்​சி​யின் சிறப்​பம்​ச​மாக 1 டன் எடை​ கொண்ட பேரீச்​சம்​பழங்​களைக் கொண்டு வடிவ​மைக்​கப்​பட்ட டைனோசர் சிற்பம் பூங்கா முகப்​பில் வைக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், பல்​வேறு பழவகைகளைக் கொண்டு தயாரிக்​கப்​பட்ட ஜூராசிக் பார்க் நுழைவு​வா​யில், சிறிய வகை டைனோசர்​கள், டைனோசர் முட்டை மற்​றும் முட்​டையி​லிருந்து வெளிவரும் உயிரினங்​கள், தாவரங்​களை உண்​ணும் டைனோசர்​கள், டைனோசர் காலத்து பறவை போன்ற வடிவ​மைப்​பு​கள் 4.5 டன் பழங்​களைப் பயன்​படுத்தி தத்ரூபமாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. இந்த வடிவ​மைப்​பு​கள் குழந்​தைகள், சுற்​றுலா பயணி​களை வெகு​வாகக் கவர்ந்​துள்​ளன. பல இடங்​களில் பூத்​துக் குலுங்​கும் மலர்​களை சுற்​றுலா பயணி​கள் கண்டு ரசித்​தனர். தோட்​டக்​கலைத்​துறை சார்​பில் அமைக்​கப்​பட்​டுள்ள அரங்​கில் 160 வகை​யான பழங்​கள் காட்​சிப்​ படுத்​தப்​பட்​டுள்​ளன. அதே​போல் அரசு, தனி​யார் மற்​றும் போட்​டி​யாளர் அரங்​கு​களும் சிறப்​பாக அமைக்​கப்​பட்​டுள்​ளன.

தமிழ்​நாட்​டின் பல்​வேறு மாவட்​டங்​களின் பழ வகைகளை அறி​முகப்​படுத்​தும் வகை​யில் கோயம்​புத்​தூர், தரு​மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம், தென்​காசி உள்​ளிட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்த தோட்​டக்​கலைத் துறை பணி​யாளர்​கள் அதி​ய​மான் கோட்​டை, இரு​வாச்சி பறவை, மரகதப் புறா, இரட்டை மயில், பவானி​ சாகர் அணை, கழுகு, வீணை உள்​ளிட்ட பல்​வேறு வடிவங்​களை, பழங்​களைக் கொண்டு அலங்​கரித்து காட்​சிப்​படுத்​தி​யுள்​ளனர். இந்தக் கண்​காட்சி வரும் 30-ம் தேதி வரை 4 நாட்​கள் நடை​பெறும் என அறிவிக்கப்பட்டுள்​ளது.