தமிழ்நாடு ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படைக்கு புது சீருடை

மிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த அதிரடிப்படைப் பணியாளர்களுக்கு கடற்படை நீல நிற (Navy Blue) சட்டையும், காக்கி நிற பேன்ட்டும் சீருடையாக நிர்ணயிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதுமற்ற காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து இந்தச் சிறப்புப் படையினரைத் தனியாக வேறுபடுத்திக் காட்டும் வகையில், பிரத்யேகமான சீருடை மற்றும் புதிய லோகோ (Regimental Logo) வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ முத்திரையும் இதில் இடம்பெறும்.

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட இந்தச் சிறப்புப் படையில், முதற்கட்டமாக ஒரு எஸ்பி, இரண்டு டிஎஸ்பிக்கள் மற்றும் நான்கு ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். கடந்த வாரம், ஐஜி கே. பவானீஸ்வரி ஐபிஎஸ் இந்த அதிரடிப்படையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இப்படைக்குத் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் பிரத்யேக தொகுதிக்கூறுகளின் (Exclusive modules) அடிப்படையில் ஒரு மாத கால தீவிரப் பணிமுன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இந்த புதிய சீருடைகள் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையின் அனைத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களுக்கும் வழங்கப்படும் என்றும், இதற்கான தொடக்க விழா விரைவில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.