13-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை-கோவையில் பரபரப்பு..!

கோவை கவுண்டம்பாளையத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிதாக கட்டபட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சூர்யா.இவர்களது மகள் தாரணி ( வயது 17) ராம்நகரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது அவருக்கு செயல்முறை தேர்வு நடந்து வருகிறது. பொது தேர்வு வருகிற 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் செய்முறை தேர்வுக்கு தாரணி படித்து வந்தார். மேலும் பொது தேர்வு ஹால் டிக்கெட் நேற்று தான் தாரணி பெற்றார் .இந்த நிலையில் நேற்று இரவு 9 – 30 மணி அளவில் தாரணி பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று 13வது மாடியில் இருந்து மாணவி தாரணி கீழே குதித்தார்.அதே இடத்தில் துடிதுடித்து செத்தார்.மாணவியின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. மாணவி தற்கொலையால் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கூட்டம் திரண்டது .இது பற்றி தகவல்அறிந்ததும் துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொது தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா ?என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது..