பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு- பைக் ஆசாமி கைவரிசை..!

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே.கே.புதூர், ராமலிங்கம் நகரைச் சேர்ந்தவர். அருள் பிரகாஷ், இவரது மனைவி சுபத்ரா (வயது 32) நேற்று இவர் குடும்பத்துடன் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். திரும்பி வரும் போது பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டான். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..