மேட்டுப்பாளையத்தில் பராமரிப்பின்றி பரிதாப நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் – வேதனையில் பொதுமக்கள்.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மகாஜன பள்ளி அருகில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு தினசரி 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்,

குறிப்பாக இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்பகட்ட அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான அனைத்து வகையான தடுப்பூசிகளும் நாய்க்கடி, விஷக்கடி, சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. ஏழை எளிய பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதிய தூய்மை பணியாளர்களை பணி அமர்த்தாததால் வளாகம் சுற்றிலும் முட் புதார்களாக குப்பை மேடுகளாகவும் காட்சியளிக்கிறது,

இதனால் விஷ ஜந்துக்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் குடிப்பதற்கு கூட குடிநீர் வசதி இல்லாததாலும் போதிய கழிவறை வசதி இல்லாததாலும் இங்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்,

மேலும் ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் போதிய மின்சார விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது, பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் இந்த ஆரம்ப சுகாதார மையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..