கோவையில் கஞ்சா விற்றதாக 3 பட்டதாரி பெண்கள் உட்பட 5 பேர் கைது..!

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வெள்ள கிணறு ரயில்வே கேட் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் கணபதி உடையாம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த ஹரிகுமார் ( வயது 19) என்பது தெரிய வந்தது .கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி நேற்று சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது 3 பெண்கள் உட்பட 5 பேர் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது 1200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 3 பெண்கள் உட்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.. விசாரணையில் அவர்கள் காணப்பட்டி ரைஸ் மில் ரோட்டை சேர்ந்த ஜனார்த்தனன் ( வயது 21) மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சபரிஷ் ( வயது 19) கோவில்பாளையம் பாலாஜி நகரை கோகுல் மனைவி லோகேஸ்வரி என்ற அபி (வயது 30)சரவணம்பட்டி ஜனதா நகர் அசீனா ( வயது 21))வரதயங்கார் பாளையம் ,சந்தியா ( வயது 20 )என்பது தெரிய வந்தது. இவர்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததார்களாம்.கைது செய்யப்பட்ட 5 பேர்களில் சபரீஷ் தவிர மற்ற 4 பட்டதாரிகள் ஆவார்கள்..