கோவையில் ஜாக் கமிட்டி சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.!

கோவையில் ஜாக் கமிட்டி பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று தியாக திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடினர்.

குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா திருமண மண்டபத்தில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. கோவையில் காலையில் இருந்து மழை பெய்து வந்ததன் காரணமாக மைதானத்தில் நடத்தாமல் திருமண மண்டபத்திற்கு வைத்து சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தியாகத் திருநாள் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து இஸ்லாமியர்கள் கூறியதாவது:-
சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாட படுகிறது. அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ,ஆடு,மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாக திருநாளை கொண்டாடி வருகிறோம்.உலக மக்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என சிறப்பு தொழுகையில் வழிபாடு நடத்தினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.