மழையால் வீட்டு மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி…

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லிகுளம் பகுதியில் குளக்கரையை சுற்றி 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன .இந்த பகுதியில் கடந்தசில நாட்களாக மழை பெய்து வருகிறது .இந்த நிலையில் அங்கு வசித்து வரும் மாறாள் (வயது83) என்பவர் நேற்று அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு காலை 10 மணி அளவில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கிரியம்மாள் என்பவரது வீட்டில் மண் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய மாறாள் அதே இடத்தில் உயிரிழந்தார்.சுவர் இடிந்து விழும்போது அந்த வீட்டில் குடியிருந்த பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் வேலைக்கு சென்று விட்டார்கள் .இதனால்வீட்டில் உள்ளவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.இது பற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.