மது அருந்துவதை தட்டி கேட்ட 4 பேரை கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை – கொலையாளிகளுக்கு தலா 4 ஆயுள் தண்டனை.!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதப்பூர் பஞ்சாயத்து கள்ளக் கிணறு பகுதியில் வசித்த மோகன்ராஜ் என்பவர் வாடகைக்கு விட்டிருக்கும் தீரன் பேக்கரிக்கு பின்புறம் மது அருந்த வந்த 3 நபர்களை தட்டி கேட்டு உள்ளார். இதனால் மோகன்ராஜ் மோகன்ராஜ் தாய் புஷ்பவதி வயது 67 மோகன்ராஜ் அத்தை ரத்தினம்மாள் வயது 58 மற்றும் மோகன்ராஜ் பெரியப்பா மகன் செந்தில்குமார் வயது 47 ஆகியோரை மது அருந்து வந்த ரவுடிகள் பளபளக்கும் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர் . இந்த கொலை வழக்கு குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து நேர்மையாக விசாரணை நடத்திட தமிழக காவல்துறையின் கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவிட்டிருந்தார் . அவரது உத்தரவின் பேரில் மேற்கு மண்டல போலீஸ் ஐஜி கே பவானிஸ் வரி கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர்களது நேரடி மேற்பார்வையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சூப்பர் பாஸ்ட் வேகத்தில் விசாரணை நடந்தது. இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட பயங்கர ரவுடிகள் குட்டி என்கிற ராஜ்குமார் என்கிற வெங்கடேஷ் வயது 27 தகப்பனார் பெயர் ஐயப்பன் வடக்கு அரியநாயகிபுரம் திருநெல்வேலி மாவட்டம் 2. சேனை முத்தையா என்கிற விஷால் வயது 22 தகப்பனார் பெயர் வன ராஜ் பரமதேவன் பட்டி உத்தமபாளையம் தேனி 3. செல்லமுத்து வயது 24 தகப்பனார் பெயர் சின்னசாமி வையம்பட்டி திருச்சி 4. ஐயப்பன் வயது 52 தகப்பனார் பெயர் பழனிச்சாமி தேவர் வடக்கு அரியநாயகிபுரம் திருநெல்வேலி மாவட்டம் 5. வெங்கடேஷ்என்கிறசெல்வம் வயது 29 தகப்பனார் பெயர் ஐயப்பன் வடக்கு அரியநாயகிபுரம் திருநெல்வேலி மாவட்டம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அனைத்து கொலையாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் . இந்த வழக்கில் புலன் விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு சௌமியா வேகமாக புலன் விசாரணை மேற்கொண்டு எதற்கும் பயப்படாமல் நேர்மையாக செயல்பட்டு குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்தார் . இந்த வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது .51 சாட்சிகள் விசாரிக்கபட்டனர் .சேலம் 10 சான்று பொருட்கள் மற்றும்31 சான்று ஆவணங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் நேர்மையாக விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பயங்கர ரவுடிகள் கொலையாளிகள் 5 நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் அரசு தரப்பில் துணிச்சலுடன் நிரூபிக்கப்பட்டதால் கொலையாளிகள் 1. குட்டி என்கிற ராஜ்குமார் என்கிற வெங்கடேஷ் 2. சோணை முத்தையா என்கிற விஷால் 3. செல்லமுத்து 4.ஐயப்பன்ஆகிய ஒவ்வொருவருக்கும் தலா 4 ஆயுள் தண்டனையும் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார் . மேலும் செல்வம் என்கிற வெங்கடேஷ் என்கிற ரவுடிக்கு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து தடயங்களை அழித்த குற்றத்திற்காக இரண்டு முறை 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதனால் அரசாங்கம் காவல்துறை மற்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது . தீர்ப்பை கேள்விப்பட்ட பொதுமக்கள் சாலையில் பட்டாசு வெடித்தும் இனிப்பும் வழங்கி ஆனந்த கூத்தாடினர்..