கோவையில் ஒரே நாளில் விபத்தில் 3 பேர் பலி..

கோவை : பொள்ளாச்சி தண்ணீர் பந்தல் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து( வயது 68) கூலி தொழிலாளி. இவர் நேற்று வடக்கிபாளையம்- நடுப்புணிரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், இவரது மொபட் மீது மோதியது .இதில் வீர முத்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார்,.இதுகுறித்து அவரது மகன் ஆனந்தகுமார் வடக்கிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல வேலாண்டிபாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் சோலைமுத்து( வயது 42 )இவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்தபூபதி (வயது 40) என்பவருடன் மொபட்டில் கோவில்பாளையம் – துடியலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி அவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சோலைமுத்து பரிதாபமாக இறந்தார் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் கரூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

இதே போல காரமடை பக்கம் உள்ள வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் வசந்த் ( வயது 20) இவரும் அதே ஊரைச் சேர்ந்த சஞ்சய் ( வயது 21 )என்பவரும் பைக்கில் தாயனூர் – வெள்ளியங்காடு ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை வசந்த் ஓட்டினார். அங்குள்ளதிருமண மண்டபம் அருகே சென்றபோது திடீரென்று பைக் நிலைதடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் வசந்த் பரிதாபமாக இறந்தார். சஞ்சய் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.