கோவையில் காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் கர்ப்பிணி பெண் திடீர் மாயம்..!

கோவை சரவணம்பட்டி அருகே விநாயகாபுரம் சுந்தரம் வீதியை சேர்ந்தவர்
செல்வம். இவரது மனைவி நர்மதா ( வயது 21). இவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு
முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நர்மதா 3 மாத கர்ப்பமாக உள்ளார். இவர் திருமணத்துக்கு பிறகு தனது
குடும்பத்தினருடன் பேசாமல் இருந்தார். கடந்த சில நாட்களாக அவர்களுடன்
பேசிக்கொண்டு இருந்தார். சம்பவத்தன்று செல்வம் வழக்கம் போல வேலைக்கு
புறப்பட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது நர்மதா வீட்டில் இல்லை.

வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது
அதில் நர்மதா ஒரு காரில் ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது
குறித்து செல்வம் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில்
போலீசார் வாக்குப்பதிவு செய்து மாயமான கர்ப்பிணி நர்மதாவை தேடி
வருகிறார்கள்.

சின்ன மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (27). தனியார் நிறுவன
மேலாளர். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அதே நிறுவகத்தில் வேலை
பார்த்த திவ்யா (27) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். அவர்
தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் தனது மனைவியிடம் காந்திபுரத்துக்கு செல்வதாக
கூறி விட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு
இருந்தது. இது குறித்து திவ்யா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின்
பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் மனைவியை தவிக்க விட்டு
மாயமான ஹரி கிருஷ்ணனை தேடி வருகிறார்கள்.