அனுமதி பெறாமல் பட்டாசு வெடித்த பாஜ.க வினர் 29 பேர் கைது..!

கோவை: அயோத்தியில் ராமர் கோவில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி கோவை குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன் பாஜகவினர் திரண்டனர். அவர்கள் அனுமதி பெறாமல் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று அந்த கூடியிருந்த சுண்டக்கா முத்து ரோட்டை சேர்ந்த ஜெகதீஷ் ( வயது 44) ஜீவா நகரைச் சேர்ந்த அருண் (வயது 30) நரசிம்மபுரம் சுரேஷ்குமார் ( வயது 40 )குனியமுத்தூர் அரசகுமார் (வயது 42) வினு தேவேந்திரன் ( வயது 42) இடையர்பாளையம் பிரகாஷ் ( வயது 39) குனியமுத்தூர் நாகப்பன் ( வயது 39) பிரசாந்த் ( வயது 30) சுண்டக்காம்புத்தூர் ரோடு சுரேஷ் ( வயது 28 )கோவை புதூர் மஞ்சு குமரன் வயது 46 இடை யர்பாளையம் அமுதா ( வயது 48) ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இதே போல வைசியாள் வீதியில் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ( வயது 60 )கைது செய்யப்பட்டார். கெம்பட்டி காலனியில் பட்டாசு வெடித்த கிருஷ்ணன் ( வயது 43) ஆர். ஜி . வீதியில் பட்டாசு வெடித்த பகத்சிங் (வயது 38 )காட்டூர் ரங்கே கோனார் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக நரசிம்மநாயக்கன்பாளையம் ஜெயபால் ( வயது 49) நிர்மல் குமார் ,விக்கி என்ற விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியில் அனுமதி பெறாமல் பட்டாசு வெடித்த விபின் ( வயது 49) பாரதி காலனி சிவக்குமார் (வயது 54) உட்பட நகரின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்த பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பு சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர்..