குடித்து விட்டு வருவதை கண்டித்ததால் 2 பேர் தற்கொலை..!

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள கணபதிபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் மணி ( வயது 65 ) கூலி தொழிலாளி. குடிபழக்கம் உடையவர்.இதனால் இவருக்கும் இவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப் படைந்த மணிநேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து மனைவி ராதாமணி ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

இதேபோல காரமடை பக்கம் உள்ள மங்கலக்கரை புதூரை சேர்ந்தவர் மாதேஷ் ( வயது 45) கூலி தொழிலாளி. இருவரும் குடிப்பழக்கம் உடையவர் .குடித்துவிட்டு அடிக்கடி வீட்டுக்கு வருவதால் மனைவி, மகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த மாதேஷ் மதுவில் விவும் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார் .இதுகுறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.