போத்தனூர் ரயில் நிலையத்தில் 1550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் – 4 பெண்கள் மீது வழக்குபதிவு..!

கோவை: பொள்ளாச்சிகுடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், தலைமையில்சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சோதனை செய்தபோது.. சுமார் 50 கிலோ எடை கொண்ட 31 சாக்கு மூட்டைகளில் 1550 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இதை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்ற ராஜி ( வயது 48) . ரபியா (வயது 45) ஜோதி ( வயது 65) பழனியம்மாள்(வயது 60) ஆகியோர் சிக்கினார்கள். விசாரணையில் இவர்கள் கோயம்புத்தூர் பகுதியில் இருந்து குறைந்த விலைக்கு பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியை வாங்கி போத்தனூர் பகுதியில் இருந்து சேகரித்து கேரளா மாநிலத்தில் அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் விற்பனை செய்ய ரயிலில் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..