பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி

பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். சூப்பர் குட் ஃபிலிமஸ் தயாரிப்பு படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு. இவ்வாறு ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தொழில் விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்தில் அகால மரணமடைந்தார். ராஜஸ்தானின் ஜோத்பூரில் உதய்பூருக்கு சென்ற வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய சவுத்திரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்தநிலையில் இன்று காலை அவரது உடல் ராஜஸ்தான் மாநிலத்தில் உடற்குறு ஆய்வு செய்யப்பட்டு ஜெய்ப்பூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தனர். இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆர்.பி.சவுத்ரியின் உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.